14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ; இளைஞருக்கு எதிராக போக்சோ வழக்கு
இந்தியாவில் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி காணாமல் போன சம்பவம் தொடர்பில், 25 வயதுடைய இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போக்சோ வழக்கு
காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தருமாறு சிறுமியின் பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பைக்காரா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். இதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் போது, உட்புரூக் பகுதியைச் சேர்ந்த தயானந்தன் என்ற நவீன் என்பவர் மாணவியை ஆந்திரப் பிரதேசத்திற்கு அழைத்துச் சென்றமை தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, மகளிர் பொலிஸாரின் உதவியுடன் மாணவி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஆந்திரப் பிரதேசத்திற்கு அழைத்துச் சென்ற பின்னர் மாணவிக்கு குறித்த நபர் பாலியல் தொல்லை வழங்கியதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து, குறித்த நபருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதுடன், அவரை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.