29 வயது இலங்கை காதலன் 40 வயது வெளிநாட்டு பெண்ணுக்கு செய்த மோசமான செயல் ; விசாரணைகள் தீவிரம்
ஜேர்மனிய பெண்ணொருவர் இலங்கை காதலானால் தாக்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
தாக்கப்பட்ட 40 வயதான அந்த ஜெர்மனியப் பெண், தனது காதலனுக்குக் கொடுத்த பணத்தைத் திரும்பக் கொடுக்குமாறு கோரி, தற்போது ரத்கம பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.

காதலன் உறவு
அந்த ஜெர்மானியப் பெண், இலங்கைக்குச் சென்றிருந்தபோது, பிட்டிவெல்ல, பூசாவைச் சேர்ந்த 29 வயது இளைஞருடன் முன்னர் காதல் உறவில் இருந்துள்ளார்.
அந்த உறவின் அடிப்படையில், அவர் தனது இலங்கைக் காதலருக்கு ஒரு மீன்பிடிப் படகு வாங்குவதற்காக 25.000 யூரோக்களைக் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இம்முறையும், அவர் ஒரு பயணத்திற்காக இலங்கைக்கு வந்து, பூசா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை முன்பதிவு செய்து, தன்னை தனது காதலன் என்று கூறிக்கொண்ட அந்த இளைஞனுடன் அங்கு நேரத்தைச் செலவழித்து வந்துள்ளதாக குறித் பெண் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹோட்டல் அறையில் தங்கியிருந்தபோது, அந்த இளைஞன் அவரை மேலும் துன்புறுத்தி, அவரிடம் பணம் கோரியுள்ளதாகவும் குறித்த காதலன் அந்த ஜெர்மானியப் பெண்ணை ஒரு தடியால் தாக்கியதாகவும், அப்போது அவரது கைபேசியும் சேதப்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
தடியால் தாக்கப்பட்ட ஜெர்மானியப் பெண், இந்தச் சம்பவம் குறித்து பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார். மேலும், படகு வாங்குவதற்காகத் தான் முன்பு கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறும் அவர் கோரியுள்ளார்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரைக் கைது செய்வதற்காக, ரத்கம பொலிஸார் தற்போது விசாரணை நடத்தி வருகிறது.