12 ராசிக்குமான ராசி கற்கள்

Astrology Hinduism
By Yadu Mar 27, 2023 02:16 AM GMT
Report

நம்மில் பலருக்கு ராசிக்கல் அணிய வேண்டும் என்ற ஆசை இருக்கும்.ஆனால் நமது ராசிக்கு ஏற்ற கல் எது என தெரியாமல் தவித்து வருவோம்.

ராசிக்கான சரியான ராசிக்கல் எது என்பதை இதில் பார்க்கலாம். ஆனால் ராசிக்கல்லை அணிவதற்கு முன் ஜோதிடரை அணுகுவது நல்லது.

அது உங்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்கும். நாம் செய்யும் சிறிய தவறு கூட நமக்கு பெரிய விளைவை ஏற்படுத்தும்.

12 ராசிக்குமான ராசி கற்கள் | 12 Zodiac Gemstones

மேஷம்

மேஷத்திற்கான ராசிக்கல் பவளம். செவ்வாய் கிரகத்தை ராசிநாதனாக கொண்டவர்கள் பவள கற்களை அணியலாம்.

இதை அணிந்தால் தெய்வ அனுகூலம் கிடைக்கும். இது கோபத்தைக் குறைத்து மன நிம்மதியை தருவதுடன், நல்ல அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும்.

சிவப்பு பவளம் நல்லறிவையும், துணிவையும் கொடுக்கும். தீய சிந்தனைகளை நமது மனதுக்குள் அனுமதிக்காது.

மன தைரியத்தை கொடுக்கும். தொழிலில் நல்ல வெற்றி கிடைப்பதுடன் பதவி உயர்வுக்கும் வழிவகுக்கும்.

12 ராசிக்குமான ராசி கற்கள் | 12 Zodiac Gemstones

ரிஷபம்

சுக்கிரன் ஆளும் ரிஷப ராசிக்காரர்கள் அணியவேண்டியது வைரம். சுக்கிர திசை நடப்பவர்களும் வைரம் அணியலாம்.

இதை அணிந்தால் நல்ல மகிழ்ச்சி கிட்டும். உங்களுக்கு வசீகரமான தோற்றத்தை கொடுக்கும். நல்ல அதிஷ்டம் உருவாகும்.

உடல் மற்றும் மனதுக்கு நல்ல ஆற்றலை தரக்கூடியது. வெற்றி, செல்வம், அதிர்ஷ்டம் போன்றவற்றை கொடுக்கும்.

நல்ல தன்னம்பிக்கையைத் தரக் கூடியது. ஆண், பெண் உறவை வலுப்படுத்துவதுடன், நல்ல தூக்கத்தைக் கொடுக்கக் கூடியது.

12 ராசிக்குமான ராசி கற்கள் | 12 Zodiac Gemstones

மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்களை ஆளுவது அறிவார்ந்த கிரகமான புதன். மரகதம் புதனுக்கான ராசிக்கல் மற்றும் இந்த விலைமதிப்பற்ற ரத்தினத்தை அணிபவர்களுக்கு சகல பாக்கியமும் கிடைக்கும்.

புதன் திசை நடப்பவர்களும் மரகதம் அணியலாம். இது தொழில் வளர்ச்சியை கொடுக்கும்.

நல்ல அதிர்ஷ்டம் தரும். நல்ல கற்பனை வளத்தைக் கொடுப்பதுடன், மலட்டுத்தன்மையைப் போக்கும்.

அதுமட்டும் அல்ல, ரத்தினம் தீய சக்திகளிடம் இருந்து நம்மைக் காக்கும். நல்ல கல்வியைக் கொடுக்கும். பேச்சாற்றல் மற்றும் நினைவாற்றலைப் பெருகும்.

12 ராசிக்குமான ராசி கற்கள் | 12 Zodiac Gemstones

கடகம்

எச்சரிக்கை கிரகமான சந்திரன் கடக ராசிக்காரர்களை ஆளுகிறது. வளர்பிறை சந்திரனுக்கு உகந்தது முத்து. கடக ராசிக்காரர்கள் இந்த கிரகத்தைப் போலவே மிகவும் உணர்ச்சிகரமான வாழ்க்கையைக் கொண்டுள்ளனர்.

எனவே 'முத்துக்கள்' உணர்ச்சிக் கொந்தளிப்பை அமைதிப்படுத்த உதவுகின்றன.சந்திர திசை நடப்பவர்களும் முத்து அணியலாம். இது செல்வ விருத்தியைக் கொடுக்கும். அமைதியையும், மகிழ்ச்சியையும் தரும்.

இது ஆண்களுக்கு தன்னம்பிக்கையையும், பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வையும் தரும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமையைத் தரும். நீண்ட ஆயுளைத் தருவதுடன் உறவுகளை வலுப்படுத்தும்.

12 ராசிக்குமான ராசி கற்கள் | 12 Zodiac Gemstones

சிம்மம்

சிம்மம் சூரியனால் ஆளப்படுகிறது மற்றும் சூரியனுக்கான ராசிக்கல் ரூபி. சூரிய திசை நடப்பவர்களும் மாணிக்கம் அணியலாம்.

இது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும், வாழ்வில் உயர்வைத் தரும், மாணிக்கம் புத்திசாதுர்யத்தைத் தருவதுடன் நீண்ட ஆயுளையும் கொடுக்கும், மன உறுதியையும், தன்னம்பிக்ககையையும் தரும்.

கருத்து வேறுபாடுகளை போக்கி நல்ல தூக்கத்தைத் தரும். உணர்ச்சி வசப்படுதலைக் கட்டுப்படுத்தும். நினைவாற்றலை அதிகப்படுத்தும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

12 ராசிக்குமான ராசி கற்கள் | 12 Zodiac Gemstones

கன்னி

புதனால் ஆளப்படும் இரண்டாவது ராசியான கன்னிக்கு உகந்த ரத்தினம் மரகதம். சுக்கிர திசை நடப்பவர்களும் மரகதம் அணியலாம்.

இது தொழில் விருத்தியையும், அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது. மலட்டுத் தன்மையைப் போக்கும். சிறந்த கல்வியைக் கொடுக்கும்.

அத்துடன் பில்லி, சூனியங்களில் இருந்து நம்மைக் காக்கும். பேச்சாற்றலை வளர்க்கும். மரகதக் கல் புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியது.

12 ராசிக்குமான ராசி கற்கள் | 12 Zodiac Gemstones

துலாம்

சுக்கிரனால் கட்டுப்படுத்தப்படும் இரண்டாவது ராசி துலாம். இந்த ராசியில் பிறந்தவர்கள் தங்கள் திறமையில் அதிக படைப்பாற்றல் மிக்கவர்கள் ஆனால் அதே நேரத்தில் அவர்களின் வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருக்கும். துலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். சுக்கிர திசை நடப்பவர்களும் வைரம் அணியலாம்.

இது மகிழ்ச்சியையும், யோகத்தையும் தரக்கூடியது. வாழ்நாள் முழுவதும் நல்ல வசீகரத்தைத் தரும். தன்னம்பிக்கையை வளர்க்கும்.

ஆண், பெண் உறவை வலுப்படுத்தும். நல்ல தூக்கத்தை தரும். பிறருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைப் போக்கும். பேச்சாற்றலை வளர்க்கும். வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் அதிகம்.

12 ராசிக்குமான ராசி கற்கள் | 12 Zodiac Gemstones

விருச்சிகம்

செவ்வாய் ஆளும் விருட்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். செவ்வாய் மற்றும் கேது திசை நடப்பவர்களும் பவளம் அணியலாம்.

இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் குறைந்து, அதிர்ஷ்டம் உண்டாகும். நல்ல துணிச்சலைத் தரும்.

பொறாமை, வெறுப்பு போன்ற தீய குணங்களைப் போக்கி ஞானத்தைக் கொடுக்கும். பயத்தை போக்கும். தொழில் செய்யும் வாய்ப்புகள் உருவாகும்.

12 ராசிக்குமான ராசி கற்கள் | 12 Zodiac Gemstones

தனுசு

வியாழன் ஆளும் தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம். குரு திசை நடப்பவர்களும் புஷ்பராகத்தை அணியலாம்.

இதை அணிந்தால் மன நிம்மதியைக் கொடுக்கும், நல்ல செல்வத்தைக் கொடுக்கும். இந்தக் கல் அணிவது நமக்கு கம்பீரத்தை கொடுப்பதுடன், துணிச்சலை ஏற்படுத்தும்.

அத்தோடு பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். திருமணத் தடை நீங்கும். வீடு கட்டும் வாய்ப்பு உண்டாகும்.

12 ராசிக்குமான ராசி கற்கள் | 12 Zodiac Gemstones

மகரம்

மகரம் சனியால் நிர்வகிக்கப்படும் இராசி அடையாளம். மகர ராசிக்காரர்கள் அணிய வேண்டியது நீலக்கல். சனி திசை நடப்பவர்களும் நீலக்கல் அணியலாம்.

இதை அணிந்தால் சமூகத்தில் நம் செல்வாக்கு உயரும். தெய்வீக சிந்தனையைத் தரும். நல்ல செல்வ வளத்தைக் கொடுக்கும்.

நினைத்தது நடக்கும். உடல்பலத்தை அதிகரிக்கும். பகையைப் போக்கக் கூடிய சக்தி இதற்க்கு உள்ளது. வம்பு, வழக்கு இருந்தால் நமக்குச் சாதகமான சூழலை உருவாக்கும்.

12 ராசிக்குமான ராசி கற்கள் | 12 Zodiac Gemstones

கும்பம்

சனி ஆளும் கும்ப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது நீலக்கல். ராகு மற்றும் சனி திசை நடப்பவர்களும் நீலக்கல் அணியலாம்.

இதை அணிவதால் செல்வ வளம் பெருகும். சமூகத்தில் நல்ல செல்வாக்கு உண்டாகும். நமது மீது உள்ள திருஷ்டியைத் தடுக்கும்.

ஞானம், சாந்தத்தை கொடுக்கும். உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். திருமண உறவை மேம்படுத்தும். வீண் வம்பு, வழக்குகளில் இருந்து நம்மைக் பாதுகாக்கும்.

12 ராசிக்குமான ராசி கற்கள் | 12 Zodiac Gemstones

மீனம்

மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம். வியாழன் திசை நடப்பவர்களும் இதை அணியலாம்.

இதை அணிந்தால் செல்வ விருத்தியை பெறலாம். துணிச்சல் உண்டாகும். பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும்.

திருமணத் தடை நீங்கும். கோபம் குறையும். நிலம், வீடு, வாகனம், வாங்கும் நிலை உருவாகும். பகை, சதி, சூழ்ச்சி ஆகியவற்றில் இருந்து காக்கும். நல்ல நட்பைக் கொடுக்கும்.

ஏழு கிரகங்களுக்கு ராசி ஆளுமைத் தன்மை உண்டு. ஆனால் ராகு கேதுவுக்குத் தனியான ராசி ஆளுமை கிடையாது.

ஜாதகரின் திசையைப் பொறுத்து ராகுவின் திசை நடக்கும் காலத்தில் கோமேதகமும், கேது திசை நடக்கும் காலத்தில் வைடூரியமும் அணிவதன் மூலம் பாதகமான பலன்களைக் கூட சாதகமாக மாற்றிக் கொள்ளலாம்.

12 ராசிக்குமான ராசி கற்கள் | 12 Zodiac Gemstones

ராசிக்கற்களை அணியும் முறை

கட்டைவிரலில் பொதுவாக மோதிரம் அணிவதைத் தவிர்ப்பது நல்லது. ஆட்காட்டி விரலில் குருவினுடைய புஷ்பராக கல், செவ்வாயினுடைய பவளம் அணிவது நல்லது. நடுவிரலில் நீலம் மற்றும் அமிதிஸ்ட் கல்லை அணிவது நன்மையைக் கொடுக்கும்.

வைரத்தை மோதிர விரல் அல்லது நடு விரலில் அணிவதால் நன்மைகள் பெருகும். சுண்டுவிரலில் பச்சை அல்லது வைரம் அணிவது சிறப்பு. ராகு கேதுவிற்கு கல் மோதிரம் அணிவது தொடர்பாக ஜாதகத்தைப் பார்த்து முடிவெடுப்பதே சிறந்தது.  

மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, திருவையாறு

10 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US