திருகோணமலையில் மரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த 12 வயது சிறுமி!
திருகோணமலையில் உள்ள கிண்ணியா பகுதியில் மரத்தில் ஏறிய சிறுமி கீழே விழுந்து உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்றையதினம் (30-11-2024) பகல் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, ஆயிலிடி கிராம சேவக பிரிவில் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
ஆயிலிடி பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயதான ரிஷ்வான் பாத்திமா ரிப்கத் வான்எல புகாரி நகர் வித்யாலயத்தில் தரம் ஆறில் கல்வி கற்று வந்துள்ளார்.
குறித்த சிறுமி, தனது வீட்டு முற்றத்தில் உள்ள மாமரத்தில் ஏறி மாங்காய் பறித்து கொண்டு இருந்த போதே, தவறி விழுந்து பாராங்கல்லில் தலை அடிபட்டு உயிரிழந்ததாக உறவினர்களால் பொலிஸில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது சடலம் கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வான்எல பொலிஸார் தெரிவித்தனர்.