இலங்கையில் 12 முக்கிய கடற்கரைகள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை!
இலங்கையில் தற்போது 12 முக்கிய கடற்கரைகள் நீலக்கொடி கடற்கரை யோசனையை நடைமுறைப்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நீலக்கொடி கடற்கரை
நீலக்கொடி கடற்கரை (Blue Flag Beach) என்பது கடலோர மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்காகவும் நாட்டின் முயற்சிகளை பாராட்டும் நோக்கில் வழங்கப்படும் சர்வதேச சுற்றுச்சூழல் அங்கீகாரம் ஆகும்.
அதன்படி, நாட்டில் 4 கடற்கரைகளை செயல்பாட்டு நிலைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறைசார் மேற்பார்வைக் குழு "நீலக் கொடி கடற்கரை" என்ற விடயம் தொடர்பில் கலந்துரையாடிய போதே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கடந்த மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தலைமையில் துறைசார் மேற்பார்வைக் குழு ஒன்று கூடியது.
இதன் போது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் நாட்டின் கரையோரங்களைத் பராமரிப்பதை நோக்கமாகக் கொண்ட “நீலக் கொடி கடற்கரை” என்ற கருத்துருவில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.