கைதாகியும் அடங்காத இந்திய மீனவர்கள்; தொடர் தொல்லை
சர்வதேச கடல் எல்லைக்குள் மீன்பிடித்த குற்றச்சாட்டில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த குறைந்தது 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று செவ்வாய்க்கிழமை (23) கைது செய்தனர்.
தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் நீர்நிலைகளுக்கு இடையே மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 12 மீனவர்கள் இலங்கையைச் சேர்ந்த கண்காணிப்புக் குழு அவர்களைக் கைது செய்து, அவர்களின் இழுவைப்படகு படகுடன் தீவில் உள்ள ஒரு கடற்படைத் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றது," என்று தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று திங்கட்கிழமை ( 22) ராமேஸ்வரம் ஜெட்டியைச் சேர்ந்த மீனவர்களுக்கு சுமார் 450 டோக்கன்கள் வழங்கப்பட்டன. இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட இழுவைப்படகு தங்கச்சிமடம், மாந்தோப்புவைச் சேர்ந்த ஜோதிபாஸுக்குச் சொந்தமானது.
அதிகாரிகளிடம் பதிவு செய்யப்படாத படகு டோக்கனைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. 12 மீனவர்களில் பிரபாத் (28), ஜேம்ஸ் ஹெய்டன் (29), மற்றும் ஆண்டனி (32) ஆகியோர் அடங்குவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தங்கள் வாழ்வாதாரம் குறித்து கவலை தெரிவித்து, கைது செய்யப்பட்ட நபர்களை விடுவிக்குமாறு மாநில மற்றும் மத்திய அரசுகளிடம் மீனவர்கள் முறையிட்டனர்.
மீனவர் சங்கங்கள் செவ்வாய்க்கிழமை ஒரு கூட்டத்தைக் கூட்டி அடுத்த நடவடிக்கை குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளது.