சிவப்பு பிடியாணை ; 13 நாடுகளில் 112 சந்தேகநபர்கள் தலைமறைவு
இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்ட 112 குற்றவாளிகள் 13 நாடுகளில் தலைமறைவாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும், அந்த சந்தேகநபர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்குத் தேவையான அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி காவல்துறை அத்தியாட்சகருமான எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.
முழு நாடுமே ஒன்றாக தேசிய செயல்பாட்டின் முன்னேற்றம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக இன்று (29) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை
மேற்படி அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேகநபர்களை 2027 ஆம் ஆண்டிற்குள் நாட்டிற்கு அழைத்து வர முடியும். அதன் பின்னர் அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சந்தேகத்தின் பேரில் அடையாளம் காணப்பட்டுள்ள அனைவரும் போதைப்பொருள் கடத்தல் மூலமே சட்டவிரோதமாகப் பணத்தைச் சம்பாதித்துள்ளனர்.
அவ்வாறு சட்ட விரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் காவல்துறையின் இரண்டு விசேட பிரிவுகள் ஊடாக 24 மணி நேரமும் தொடர்ச்சியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வூட்லர் தெரிவித்தார்.