அஸ்வெசும பயனாளிகள் பட்டியலிலிருந்து 14 லட்சம் பேர் நீக்கம்
'அஸ்வெசும' பயனாளிகளைத் தெரிவு செய்யும் திட்டத்தின் புதிய நடைமுறையின் கீழ் 1,391,830 பேர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2025.12.15 ஆம் திகதியிட்ட 2497/03 ஆம் இலக்க அரசாங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் இனிவரும் காலங்களில் 'தீவிர வறுமைக்கோடு' (Extreme Poor) மற்றும் 'வறுமைக்கோடு' ஆகிய இரு பிரிவுகளுக்கு மட்டுமே கொடுப்பனவுகள் வழங்கப்படும்.

தீவிர வறுமைக்கோடு - பயனாளிகளின் பெயர் பட்டியல்
இதற்கமைய, தகவல்கள் புதுப்பிக்கப்பட்டதன் பின்னர், மாதாந்தம் 17,500 ரூபாய் கொடுப்பனவு உரித்தாகும் 'தீவிர வறுமைக்கோடு' பிரிவின் கீழ் 363,142 பயனாளிகளும், மாதாந்தம் 10,000 ரூபாய் கொடுப்பனவு உரித்தாகும் 'வறுமைக்கோடு' பிரிவின் கீழ் 628,658 பயனாளிகளுமாக முதலாவது பட்டியலின் கீழ் மொத்தமாக 991,800 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்படவுள்ள இரண்டாவது பெயர் பட்டியலில் 740,127 குடும்பங்கள் மட்டுமே தெரிவு செய்யப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
தற்போது தகுதி பெற்றுள்ள பயனாளிகளின் பெயர் பட்டியல் அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களின் அறிவித்தல் பலகைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பட்டியல் தொடர்பில் ஏதேனும் மேன்முறையீடுகள் அல்லது ஆட்சேபனைகள் இருப்பின், இன்று (29) முதல் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை அதனைச் சமர்ப்பிப்பதற்கு மக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தகவல்களைப் புதுப்பிக்கும் செயல்முறை நிறைவடைந்த பின்னர், தகுதிபெறும் புதிய பயனாளிகளின் இரண்டாவது பெயர் பட்டியலை எதிர்வரும் டிசம்பர் மாதம் வெளியிட நலன்புரி நன்மைகள் சபை எதிர்பார்த்துள்ளது.