உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவை முந்திய இலங்கை!
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 2026ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடுகளின்படி, தெற்காசியாவில் தலா மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP per capita) அடிப்படையில் இலங்கை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மதிப்பீட்டின்படி, இலங்கையின் தலா மொத்த உள்நாட்டு உற்பத்தி 5,006 அமெரிக்க டொலர்களாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது இடத்தைப் பிடித்த இலங்கை
19,510 டொலர்களுடன் மாலத்தீவு முதலிடத்தில் உள்ள நிலையில், 4,930 டொலர்களுடன் பூட்டான் மூன்றாவது இடத்தில் உள்ளது.
மேலும், பங்களாதேஷ் 2,890 டொலர்களுடன் நான்காவது இடத்திலும், இந்தியா 2,750 டொலர்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், தலா மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பை அதன் மக்கள் தொகையால் வகுத்துக் கணக்கிடப்படும் சராசரி அளவீடாகும். இது ஒவ்வொரு குடிமகனும் உண்மையில் பெறும் வருமானத்தைக் குறிக்காது.
எனவே, இந்தப் புள்ளிவிவரத்தை மட்டும் வைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தையோ பொருளாதார நலனையோ முழுமையாகத் தீர்மானிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.