விடுதி ஒன்றில் திடீர் சுற்றிவளைப்பு ; 11 பெண்களும் 4 ஆண்களும் கைது
கொழும்பு, மொரட்டுவை - லுனாவ பிரதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த சூதாட்ட விடுதி ஒன்றிலிருந்து 11 பெண்களும் 4 ஆண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அங்குலானை பொலிஸார் தெரிவித்தனர்.
அங்குலானை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நீண்ட காலமாக முழு நேர வேலையாக இந்த சூதாட்ட விடுதியை நடத்திச் செல்வதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சூதாட்ட விடுதி தினமும் காலை முதல் இரவு வரை இயங்கி வருவதன் காரணமாக பிரதேசவாசிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குலானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.