மதவழிபாட்டு தலத்திற்குள் 10 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் ; கூட்டாக சீரழித்த கும்பல்
உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி தனது சகோதரியுடன் சேர்ந்து அங்குள்ள கிணற்றுப்பகுதியில் துணி துவைத்துக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு பைக்கில் வந்த இருவர் சிறுமியை கடத்திச்சென்றனர்.

பாலியல் வன்கொடுமை
அப்பகுதியில் ஆள்நடமாட்டமற்ற மதவழிபாட்டு தலத்திற்கு சிறுமியை கடத்திச்சென்றனர். அங்கு வைத்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி அழுதுகொண்டே கிணற்றுப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்து வந்த தனது சகோதரியிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சகோதரி உடனடியாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து பெற்றோர் பொலிஸில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.