புதிய இலங்கை கடவுச்சீட்டு விவகாரம் ; நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்

Sri Lanka Parliament Sri Lanka Passport
By Sahana Aug 09, 2026 12:21 AM GMT
Report

புதிய இலங்கை கடவுச்சீட்டுகளின் தரம் மற்றும் சர்வதேச ரீதியில் அவை ஏற்றுக்கொள்ளப்படுவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளது.

கொண்டைக்கடலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயு ; பரிதாபமாக உயிரிழந்த இரு சிறுமிகள்

கொண்டைக்கடலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயு ; பரிதாபமாக உயிரிழந்த இரு சிறுமிகள்

புதிய கடவுச்சீட்டின் தரம் காரணமாக இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரித்தானிய குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த கடவுச்சீட்டை பிரித்தானிய குடிவரவு அதிகாரிகளால் முறையாக ஸ்கேன் செய்து வாசிக்க முடியாத நிலையில், அது போலியான கடவுச்சீட்டாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய இலங்கை கடவுச்சீட்டு விவகாரம் ; நாடாளுமன்றத்தில் காரசார விவாதம் | New Sri Lankan Passport Issue Heated Debate Parlia

இலங்கை கடவுச்சீட்டுக்கான கட்டணம் தொடர்ந்து 6,000 ரூபாயாக காணப்படும் நிலையில், புதிய கடவுச்சீட்டில் உள்ள பக்கங்களின் எண்ணிக்கை 64இலிருந்து 48ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், புதிய கடவுச்சீட்டுகளில் அவதானிப்பு அல்லது நீட்டிப்பு பக்கங்கள் இல்லாததுடன், அச்சுத் தரமும் குறைவாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டுகளில் இடப்படும் குடிவரவு முத்திரைகளின் மை மறுபக்கத்தில் கசியும் வகையிலான பிரச்சினைகளும் காணப்படுவதாகவும், இதன் காரணமாக சில நாடுகள் குறித்த கடவுச்சீட்டுகளை நிராகரித்துள்ளதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, புதிய இலங்கை கடவுச்சீட்டுகளில் தரக்குறைபாடுகள் காணப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.

கடவுச்சீட்டில் உள்ள பக்கங்களின் எண்ணிக்கை 64இலிருந்து 48ஆகக் குறைக்கப்பட்டிருப்பது சர்வதேச தரநிலைகளுக்கு அமைவான நடவடிக்கையே என அமைச்சர் தெரிவித்துள்ளார். பல நாடுகளிலும் இதேபோன்ற நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

50 இலட்சம் கடவுச்சீட்டுகள் கொள்முதல்

இதனிடையே, 50 இலட்சம் கடவுச்சீட்டுகளை கொள்முதல் செய்வதற்கான விலைமனு கோரல் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் மின்னணு கடவுச்சீட்டு முறையை அறிமுகப்படுத்துவதில் காணப்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய கடவுச்சீட்டுகளின் தரம், சர்வதேச ரீதியில் அவற்றை பயன்படுத்துவதில் ஏற்படுவதாகக் கூறப்படும் சிக்கல்கள் மற்றும் மின்னணு கடவுச்சீட்டு அறிமுகம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இந்த விவாதம் தற்போது கவனம் பெற்றுள்ளது.

பூமியை நோக்கி வரும் பிரம்மாண்ட விண்கலம் ; பாபா வங்காவின் 3 அதிர்ச்சி கணிப்புகள் மீண்டும் வைரல்

பூமியை நோக்கி வரும் பிரம்மாண்ட விண்கலம் ; பாபா வங்காவின் 3 அதிர்ச்சி கணிப்புகள் மீண்டும் வைரல்

மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US