புதன் பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மே 29 ஆம் திகதி புதன் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மிதுன ராசியில் ஜூன் 22 ஆம் திகதி வரை இருப்பார்.

முக்கியமாக இந்த ராசியில் புதன் நுழையும் போது பத்ரா ராஜயோகம் உருவாகவுள்ளது. புதனின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அதுவும் 3 ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதன் பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்
கடக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். மனக் குழப்பம் அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்கும். பண விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். மனதை தெளிவாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் உணர்ச்சி ரீதியான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் எந்த ஒரு அபாயகரமான முதலீடுகளை செய்வதையும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் நிதி இழப்புக்களை சந்திக்க நேரிடும். வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்படக்கூடும். எதிலும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். முக்கியமாக பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். கடினமான சூழ்நிலைகளில் அமைதியாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

தனுசு
தனுசு ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இக்காலத்தில் உங்களின் வார்த்தைகள் தவறாக எடுத்துக் கொள்ளப்பட வாய்ப்புள்ளதால், பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். உறவுகளைப் பொறுத்தவரை, தவறான புரிதல்கள் உறவுகளை சேதப்படுத்தும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும். தொழிலதிபர்கள் இழப்புக்களை சந்திக்கும் வாய்ப்புள்ளதால், சற்று உஷாராக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
