மங்களாதித்ய ராஜயோகம் ; கையில் பணம் குவிய போகும் ராசிக்காரர்கள்
மே மாதத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் மே 11 ஆம் திகதி தனது சொந்த ராசியான மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மேஷ ராசியில் செவ்வாய் மற்றும் சூரியனின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையின் காரணமாக மங்களாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.

ஜோதிடத்தில் இந்த ராஜயோகமானது மிகவும் செல்வாக்குமிக்கதாக கருதப்படுகிறது. அதுவும் செவ்வாயின் சொந்த ராசியில் இந்த யோகம் உருவாகியிருப்பது இன்னும் சிறப்பானது.
இப்போது சூரியன் மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் மேஷ ராசியில் உருவாகும் மங்களாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் மற்றும் சூரியனின் சேர்க்கையால் மங்களாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை மேம்படும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தாலோ அல்லது புதிதாக முதலீடுகளை செய்தாலோ, நல்ல லாபம் கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் செவ்வாய் மற்றும் சூரியனின் சேர்க்கையால் மங்களாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலையில் நல்ல வெற்றியையும், லாபத்தையும் பெறுவார்கள். வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. கடன் தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இக்காலத்தில் எடுக்கும் முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்

தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டில் செவ்வாய் மற்றும் சூரியனின் சேர்க்கையால் மங்களாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

கும்பம்
கும்ப ராசியின் 3 ஆவது வீட்டில் செவ்வாய் மற்றும் சூரியனின் சேர்க்கையால் மங்களாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் பல நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மன அமைதி அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
