புதன் விருச்சிக ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிக்காரர்கள்
கிரகங்களின் இளவரசரான புதன் அக்டோபர் 28 ஆம் திகதி தனது ராசியை மாற்றப்போகிறார். புதன் கிரகம்தான் உங்களுக்கு புத்திசாலித்தனம், விழிப்புணர்வு, வேலை மற்றும் திறமையை அளிக்கிறது. எனவே புதனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் வாழ்க்கை இரண்டிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும்.

புதன் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்கிறார். இது சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளை அளிக்கப்போகிறது. அந்த வகையில் எந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியானதாக மாறப்போகிறது என நாம் இங்பு பார்ப்போம்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு, புதனின் கிரக மாற்றம் பல சிறப்பான நன்மைகளை அளிக்கப்போகிறது. அவர்களின் வாழ்க்கையில் நிலவி வந்த பணக்கஷ்டங்கள் முடிவுக்கு வரும். அவர்கள் வாழ்க்கையின் நீண்டகால ஆசைகளில் பல இந்த கிரக மாற்றத்தால் நிறைவேறும். நிதிப் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் தேடிவரும். திருமண வாழ்க்கையில் அன்பும், புரிதலும் அதிகரிக்கும்.

கன்னி
புதன் விருச்சிக ராசிக்கு செல்வதால் கன்னி ராசிக்காரர்கள் பெரும் நன்மைகளை அடையப்போகிறார்கள். இந்த காலகட்டத்தில் அவர்களின் பொருளாதார நிலை வெகுவாக மேம்படும், வியாபாரிகள் பெரிய வெற்றியை அடைவார்கள். அவர்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைச் செலவிடலாம், மேலும் பிடித்த இடத்திற்கு துணையுடன் செல்வதற்கு வாய்ப்புக் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சி தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் வாழ்க்கை இரண்டிலுமே மகத்தான அதிர்ஷ்டத்தை அளிக்கப்போகிறது. இந்த கிரக பெயர்ச்சியால் அவர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கக்கூடும். இந்த பெயர்ச்சியால் வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம், இதனால் லாபம் அதிகரிக்கும்.
