ரேவதி நட்சத்திரத்தில் பெயர்ச்சியாகும் சனி் ; இந்தராசிகளுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட் ; உங்க ராசி இருக்கா?
ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக சனி பகவான் இருக்கிறார். இவர் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர் தன்னுடைய ராசியை மாற்றுகிறார். சனிபகவானின் பெயர்ச்சி இந்த 12 ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில், ஜூலை சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சியானது குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் மாற்றம் கொடுக்கப்போகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மிகப்பெரிய மாற்றம்
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. இவர்கள் நீண்ட உழைப்பிற்கு ஏற்ற அதிர்ஷ்டத்தை பெற போகிறார்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து இவர்களுக்கு நல்ல லாபமும் வருமானமும் கிடைக்கப் போகிறது. நினைத்த காரியங்கள் கைகூடிவரும். மாணவர்கள் படிப்பில் மிகச்சிறந்த முன்னேற்றத்தை இந்த காலகட்டங்களில் பெறுவார்கள்.
கடகம்: சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு வேலை செய்யும் இடங்களில் புதிய பொறுப்புகள் தேடி வரும். பதவி உயர்வு கிடைக்கும், தொழில் ரீதியாக எதிர்பார்த்த பலன் பெறுவார்கள். வாழ்க்கையில் இருந்து வந்த சிறு சிறு பிரச்சனைகள் விலகும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவதற்கான காலம் பிறக்கும்.
மகரம்: சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு மிகச்சிறந்த சுப பலன்களை கொடுக்கப் போகிறது. இவர்களுக்கு எதிர்ப்பாராத வெற்றி அதிர்ஷ்டம் ஆகியவை காத்திருக்கிறது. உங்களுக்கு வேலை செய்யும் இடங்களில் மதிப்பு மரியாதை உயரக்கூடிய காலகட்டம். வெளிநாடு வெளி மாநிலங்கள் சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வருமானம் உயரும். சொந்த வீடு கட்டுவதற்கான யோகம் உருவாகக்கூடிய காலம்.