புதன் நட்சத்திர பெயர்ச்சியால் நிதி இழப்பு ஏற்படும் ; உங்க ராசியும் இதில் இருக்கா?
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். புதன் 21 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். தற்போது புதன் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் மே 19 ஆம் திகதியான இன்று நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது, புதன் ரோகிணி நட்சத்திரத்திற்குள் நுழைகிறார்.

இந்த ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன். இந்த சந்திரனும், புதனும் நட்பு கிரகங்களாவர். இந்த நட்சத்திர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். இப்போது புதன் நட்சத்திர பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

விருச்சிகம்
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். பேச்சால் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கூட்டு தொழில் செய்பவர்கள் இக்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகும். முக்கியமாக இக்காலத்தில் எந்த ஒரு ஒப்பந்தங்களிலும் அவசரப்பட்டு கையெழுத்திடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பின்னர் வருத்தப்படக்கூடும்.

தனுசு
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் போட்டியாளர் உங்கள் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கலாம். உங்களின் திட்டங்களை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும். யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதை தவிர்க்க வேண்டும். நரம்பு அல்லது தோல் சம்பந்தமான பிரச்சனைகளால் சிரமப்பட நேரிடும். மன அழுத்தத்தால் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படக்கூடும்.

கும்பம்
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். வீட்டுச் சூழல் மோசமாக இருக்கும். சிறு விஷயங்களுக்கும் அதிகமாக போராட வேண்டியிருக்கும். வீட்டிற்காக நிறைய செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். இதன் விளைவாக பணப் பிரச்சனைகளால் சிரமப்படக்கூடும். தாயாரின் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். அவரது ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், பெரிய சிக்கலில் சிக்க நேரிடும்.
