பொங்கல் அன்று நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
பொங்கல் அன்று சுக்கிரன் ஜனவரி 15 ஆம் திகதி யுரேனஸுடன் சேர்ந்து நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இந்த யோகத்தின் போது சுக்கிரனும் யுரேனஸும் ஒன்றுக்கொன்று 120 டிகிரியில் இருக்கும்.

ஜோதிடத்தின் படி, யுரேனஸ் தற்போது ரிஷப ராசியில் உள்ளது. இந்த யுரேனஸ் ஒரு ராசியில் 7 ஆண்டுகள் வரை இருக்கும். இதன் விளைவாக யுரேனஸ் ஒரு சுழற்சியை முடிக்க சுமார் 84 ஆண்டுகள் ஆகும்.பொங்கல் அன்று உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
பொங்கல் நாளில் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் ரிஷப ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழில் ரீதியாக, நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும்.

மிதுனம்
பொங்கல் நாளில் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் மிதுன ராசிக்காரர்கள் பல வழிகளில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை காண்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். படைப்புத் திறன்கள் மேம்படும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக நீண்ட கால ஆசைகள் நிறைவேறும்.

மகரம்
பொங்கல் நாளில் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் வேலை மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள். வணிகர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பல புதிய வருமான வழிகள் திறக்கப்படும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
