கண்டி, நுவரெலியா பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை ; மக்களை வெளியேற அறிவுறுத்து
கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் நீல்தண்டாஹின்ன, வலப்பனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல், மண்சரிவு எச்சரிக்கை இரண்டாம் கட்டத்தின் கீழ், மாத்தளை மாவட்டத்தின் வில்கமுவ மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் மதுரட்ட, ஹங்குரன்கெத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மழையுடனான காலநிலை நிலவுவதால் மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்படக்கூடுமென்றும், அவ்வாறான அறிகுறிகள் தென்பட்டவுடன் மக்கள் உடனடியாக அந்த இடங்களிலிருந்து வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.