பாடபுத்தக விவகாரம் ; எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம், பிரதமர் வெளியிட்ட தகவல்
இரண்டாம் மற்றும் மூன்றாம் பாடசாலைத் தவணைகளுக்குரிய கற்றல் தொகுதிகளை தயாரிக்கும்போது, இனிவரும் காலங்களில் எந்தவொரு தரத்திற்கும் இணையதள இணைப்புகளை உள்ளடக்கக் கூடாது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இன்று (09) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். தேசிய கல்வி நிறுவகத்தின் கல்விசார் சபையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இணையதள முகவரிகள்
பாடப்புத்தகங்கள் அல்லது கற்றல் தொகுதிகளில் மாணவர்களுக்காக வழங்கப்பட்டு வந்த மற்றும் கியூ.ஆர். குறியீடுகள் இனிவரும் காலங்களில் முழுமையாக நிறுத்தப்படும்.
தற்போது கற்றல் தொகுதிகளில் உள்ளடக்கப்பட்டுள்ள இணையதளங்கள் மற்றும் ஏனைய மூலங்கள் எவற்றுக்கும் பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை எனப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க இணையதளங்களைப் பயன்படுத்தும்போது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் அல்லது கொள்முதல் தொடர்பான சிக்கல்கள் எதுவும் எழவில்லை என்பதையும் அவர் இதன்போது தெளிவுபடுத்தினார்.