இலங்கை அணிக்கு எதிரான T20 போட்டியில் சிம்பாப்வே அணி வெற்றி
முத்தரப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சிம்பாப்வே அணி 67 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
ராவல்பிண்டியில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் சிம்பாப்வே அணி சார்பில் Brian Bennett அதிகபட்சமாக 49 ஓட்டங்களையும், அணித்தலைவர் Sikandar Raza 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Wanindu Hasaranga 03 விக்கெட்டுக்களையும், Eshan Malinga 02 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதன்படி163 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 95 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் Dasun Shanaka மாத்திரம் 34 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கே ஆட்டமிழந்தனர்.
பந்து வீச்சில் சிம்பாப்வே அணி சார்பில் Brad Evans 03 விக்கெட்டுக்களையும், Richard Ngarava விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
முத்தரப்பு தொடரில் பங்கேற்ற முதலாவது போட்டியிலேயே இலங்கை அணி தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.