புதுக்குடியிருப்பில் வசமாக பிடிபட்ட இளைஞர்கள் ; சோதனையில் கிடைத்த பொருட்களால் அதிர்ச்சி
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் பொலிஸாரால் நடத்தப்பட்ட விசேட சோதனைகளின்போது ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஸ்வமடு பகுதியில் வட மாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல்
சந்தேக நபர்களிடமிருந்து 205 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 170 கிராம் ஹெரோயின் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் விஸ்வமடு பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 32 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் ஒருவர் போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கொழும்பு - மட்டக்குளி, கதிரானவத்தை பகுதியில் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் நடத்தப்பட்ட மற்றுமொரு சோதனையில் பெருமளவிலான ஹெரோயினுடன் 34 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 352 கிராம் ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் மூலம் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 52,950 ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு மற்றும் மட்டக்குளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்