இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ; இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
மேல், சப்ரகமுவ, தெற்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (08) நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிக்கை இன்று இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அந்தப் பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.