முச்சக்கர வண்டியை திருட முயன்ற இளைஞன் ; சினிமா பாணியில் அதிரடி காட்டிய பெண் பொலிஸ் அதிகாரிகள்
அளுத்கம நகரில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை கடத்த முயன்ற சந்தேக நபரை இரண்டு பெண் பொலிஸ் அதிகாரிகள் துரத்திச் சென்று கைது செய்த சம்பவம் நேற்று (09) அளுத்கமவில் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சந்தேக நபர் கைது
அளுத்கம நகரில் நிறுத்தப்பட்டிருந்த தனது முச்சக்கர வண்டியியை யாரோ கடத்த முயற்சிப்பதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தொலைபேசி மூலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நேரத்தில் கடமையில் இரண்டு பெண் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து தப்பிச் சென்ற முச்சக்கர வண்டியைத் துரத்திச் சென்று அளுத்கம-வெலிபென்ன பிரதான வீதியில் வாகனத்தை நிறுத்தி சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாவனல்லை, இஹலஹேன பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் இன்று (10) களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.