யாழில் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பப்படும் இளைஞர்கள்
யாழில் போதைப்பொருள் பாவணைக்கு அடிமையான 20 இளைஞர்களை புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கையின் போது யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் 100 இற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 27 பேரும் , ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 04 பேரும் , கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 30 பேரும் போதை மாத்திரைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 27 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
கைதானவர்களில் 20 பேர் போதைக்கு அடிமையானவர்கள் என பொலிஸ் விசாரணைகளின் போது , கண்டறிந்துள்ளோம்.
அவர்களை நீதிமன்றில் முற்படுத்தி , நீதிமன்றம் ஊடாக போதை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.