ஜரோப்பிய நாட்டிலிருந்து வந்த பொதியில் ஆபத்தான பொருள்; தமிழ் இளைஞன் அதிரடி கைது
திருகோணமலை தபால் நிலையத்திற்கு, வெளிநாட்டில் நாட்டில் இருந்து வந்த பொதியை பெறுவதற்காக சென்ற இளைஞனை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பெல்ஜியம் நாட்டிலிருந்து குறித்த பொதியை சுங்க அதிகாரிகள் பரிசோதனைக்குட்படுத்தியபோது, அதில் 6 கிலோகிராம் நிறையுடைய மெண்டி என்ற போதைப்பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
அஞ்சல் மூலம் கடத்தல்
இதன்போதே சந்தேக நபரை கைது செய்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்தசம்பவம் நேற்று (22) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு பொதிகளில் குறித்த போதைப்பொருள் இருந்ததாகவும் பெல்ஜியம் நாட்டில் இருந்து அஞ்சல் மூலமாக திருகோணமலை தபால் நிலையத்திற்கு மூதூர் பகுதியைச் சேர்ந்த குறித்த நபரின் பெயருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதன் பெறுமதி சுமார் பல கோடி ரூபாவிற்கு மேல் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.