கித்துல்கலவில் நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு ; ஒருவர் மாயம்
கேகாலை மாவட்டம், கித்துல்கல – மன்னாங்கெத்தி எல்ல பகுதியில் நீராடச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கியத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு இளைஞர் காணாமல் போயுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, குறித்த பகுதிக்கு நீராடுவதற்காகச் சென்ற போதே எதிர்பாராதவிதமாக இவ்விருவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக அப்பகுதிக்குச் சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது நீரில் மூழ்கிய ஒரு இளைஞரின் உடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போயுள்ள மற்றைய இளைஞரைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.