யாழில் கோர விபத்தில் இளைஞர் உயிரிழப்பு; இருவர் அதிதீவிர சிகிச்சையில்
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மட்டுவில் பகுதியிலிருந்து புத்தூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன், வீதியின் குறுக்கே திடீரென நுழைந்த முச்சக்கர வண்டி மோதி இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.

இருவர் அதிதீவிர சிகிச்சையில்...
இதன்போது முச்சக்கர வண்டியின் மீது டிப்பர் வாகனம் ஏறியதில், அதில் பயணித்த மூன்று இளைஞர்களின் கால்களும் நசுங்கி அவர்கள் படுகாயமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் மூவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்களில் புத்தூரைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்த நிலையில் , ஏனைய இருவருக்கும் அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.