சர்வதேச சந்தையில் சரிந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை!
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களின் பின்னணியில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (28) வீழ்ச்சியடைந்துள்ளன. அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,049.69 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 57.41 அமெரிக்க டொலராகக் காணப்படுகிறது.

இலங்கையின் உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வந்த நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை வீழ்ச்சியின் தாக்கம் உள்நாட்டுத் தங்க விலையிலும் பிரதிபலிக்கக்கூடும் எனச் சந்தைத் தரப்புகள் எதிர்பார்க்கின்றன.
இருப்பினும், உள்நாட்டுத் தங்க விலைகளில் ஏற்படும் மாற்றம், நாணய மாற்று விகிதம் மற்றும் உள்ளூர் சந்தை நிலவரம் உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்தே அமையும்.