யாழில் இரவில் நடந்த அசம்பாவிதம் ; மூன்று இளைஞர்களின் கால்களுக்கு நேர்ந்த கதி
Jaffna
Sri Lanka Police Investigation
Accident
By Vironika
யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
மட்டுவில் பகுதியிலிருந்து புத்தூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன், திடீரெனக் குறுக்கே சென்ற முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, டிப்பர் வாகனம் முச்சக்கரவண்டியின் மீது ஏறியதில், அதில் பயணம் செய்த மூன்று இளைஞர்களின் கால்களும் நசுங்கிப் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த மூவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அறியமுடிகிறது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US