விகாரையில் இருந்த யானை தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு
அளுத்கம பகுதியில் விகாரையில் இருந்த யானை தாக்கியதில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். சுற்றுலா வழிகாட்டியான அஹுங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய திருமணமாகாத நபரே மரணமடைந்துள்ளார்.
அளுத்கம கந்தே விகாரையிலிருந்த யானையே இன்று (26) பிற்பகல் குறித்த நபரை தாக்கியுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றுடன் வான் ஒன்றில் அளுத்கம கந்தே விகாரைக்குச் சென்ற சுற்றுலா வழிகாட்டி, விகாரையிலிருந்த யானைக்கு பழத்தட்டு ஒன்றை வழங்கச் சென்ற போதே இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்தவர் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கும் போதே அவர் உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் சடலம் தற்போது பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.