முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது ; அதிர்ச்சியில் திமுக
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 100 கோடி மோசடி செய்த வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் முன் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்துள்ளனர்.
திமுக ஆட்சிக் காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி (DTCP), சிஎம்டிஏ (CMDA) அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வச் சான்றிதழ்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, 100 கோடி ரூபாய்க்கும் மேல் சட்டவிரோதமாகப் பணம் வசூலித்ததாகப் புகார் எழுந்தது.

திமுக ஆட்சிக் காலத்தில் 100 கோடி ரூபாய் பணம் வசூலிப்பு
இவ்வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் உள்ளிட்ட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அன்பில் மகேஷ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன், குற்றச்சாட்டுகளின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டார்.
இன்று திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷைக் கைது செய்துள்ள சம்பவம் தமிழக அரசியல் மற்றும் கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.