அலி காமேனி உயிரிழப்பு; ஈரானின் அடுத்த தலைவர் யார்? வலுக்கும் போட்டி!
ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி (Ali Hosseini Khamenei) கொல்லப்பட்டதால், அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அப்பதவிக்கு போட்டி நிலவுவதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் அதிகபட்ச அதிகாரம் வைத்திருந்த மதத் தலைவர் அயதுல்லா அலி காமேனி (Ali Hosseini Khamenei) கொல்லப்பட்டார்.

மதகுரு ஆட்சியைத் தூக்கி எறியுங்கள்
இதனால் அடுத்த தலைவர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. தனக்குப் பின்னர் இவர்தான் வாரிசு என்று கொமெய்னி (Ali Hosseini Khamenei) பகிரங்கமாக யாரையும் அறிவிக்கவில்லை.
ஆனால், அவருடைய 2-வது மகன் மோஜ்தபா கொமெய்னிதான் அடுத்த தலைவராக வருவார் என்று கூறப்படுகிறது. 56 வயதாகும் மோஜ்தபா தனது தந்தை கொமெய்னியிடம் அரசியல் கற்றவர் என்று கூறப்படுகின்றது.
எனினும் எதிர் தரப்பைச் சேர்ந்த 2 பேர் ஈரானில் ஆட்சியைப் பிடிக்க முயற்சித்து வருகின்றனர். அதில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் மர்யம் ரஜாவி மற்றும் அமெரிக்காவில் தஞ்சம் அடைந்துள்ள ஈரானின் பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி ஆகியோர் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கின்றனர்.
அமெரிக்க தாக்குதலில் கொமெய்னி கொல்லப்பட்ட பிறகு, இவர்கள் இருவரும் விடுத்த செய்தியில், “ஈரான் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
அத்துடன் ஈரானில் இஸ்லாமிய குடியரசுக்கான எதிர்கால திட்டங்கள் குறித்து இருவரும் விளக்கமாக எடுத்துரைத்துள்ளனர். மர்யம் ரஜாவி வெளியிட்ட செய்தியில், ஈரானிய மக்களே! மதகுரு ஆட்சியைத் தூக்கி எறியுங்கள். ஜனநாயகக் குடியரசு ஆட்சியை ஏற்படுத்துங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்லாமிய ஆட்சி சிதைந்தால், அதற்கு மாற்றான ஜனநாயக ஆட்சி மாற்றத்துக்கு என்னிடம் திட்டங்கள் உள்ளன என ஈரான் கடைசி மன்னரின் மகன் ரெசா பஹ்லவி,
தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அமெரிக்காவின் நடவடிக்கை ஈரான் மக்களுக்கு எதிரானது அல்ல. அது மனிதாபிமான தலையீடு” என்று கூறியுள்ளார்.
அதேசமயம் இவர்கள் தவிர ஈரானில் இஸ்லாமிய புரட்சிக்கு வழிவகுத்த ருஹோல்லா கொமேனியின் பேரன் ஹசன் கொமெய்னியும் (53) ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கின்றார்.