ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்க்கும் ஐரோப்பிய நாடுகள்!
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்க்க தயாராக உள்ளதாக தெரிவித்து இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
நட்பு நாடுகளின் நலன்களை பாதுகாக்க ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவப் பயன்படும் தளங்களை அழிக்க தற்காப்புத் தாக்குதல்களை நடத்த தயார் எனவும் இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி
அதேவேளை ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதற்கான திட்டங்களைப் பரிசீலித்து வருவதாக வளைகுடா நாடுகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளமை , பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கட்டார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா ஒத்துழைப்பு சபை இணைந்து வெளியிட்டுள்ள பரபரப்பான கூட்டறிக்கையிலேயே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.