ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞர்கள்
கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சேதவத்தை மற்றும் கொழும்பு 14 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 19 மற்றும் 26 வயதுடைய இளைஞர்கள் ஆவார்.
திடீர் சுற்றிவளைப்பு
கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்களிடமிருந்து 08 கிராம் 110 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் மற்ற சந்தேக நபரிடம் 11 கிராம் 130மில்லி கிராம் 450 ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.