பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் இளைஞன் செய்த செயல்
கொழும்பு - மாதம்பிட்டிய வீதி பகுதியில், பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொச்சிக்கடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை
இதன்போது சந்தேகநபரிடமிருந்து, 588 கிராம் 570 மில்லிகிராம் ஐஸ்;, 595 கிராம் 430 மில்லிகிராம் ஹாஷ்;, 234 போதை மாத்திரைகள் மற்றும் 286 போதை ஸ்டாம்புகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மாதம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மாதம்பிட்டிய பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.