பொலிஸாருக்கு உதவ முயன்ற இளைஞர் மீது தாக்குதல் ; செட்டியார் தெருவில் பரபரப்பை கிளப்பிய சம்பவம்
களவு நகை தொடர்பிலான விசாரணை ஒன்றின்போது, பொலிஸாருக்கு மொழிபெயர்த்து உதவ முயன்ற இளைஞர் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்து மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு 11, செட்டியார் தெரு பகுதியில் களவு நகை தொடர்பான விசாரணைக்காக பொலிஸார் வருகை தந்திருந்த வேளையில், மொழிப்பிரச்சினை காரணமாக விசாரணை நடவடிக்கைகளை இரு தரப்பினருக்கும் இடையே முன்னெடுப்பதற்காக குறித்த இளைஞர் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டார்.

மேலதிக விசாரணைகள்
இதன்போது, ஏற்பட்ட குழப்பகரமான நிலையில் ஆத்திரமடைந்த மூன்று பொலிஸார் இணைந்து, அவ்விளைஞரை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
பொலிஸாரின் இத்தாக்குதலில் காயமடைந்த இளைஞர், சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்து விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை அவசர சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
பொதுமக்களுக்கு சட்டத்தின் வழியில் உதவ முன்வந்த இளைஞர் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலைக் கண்டித்து அங்கு பொதுமக்கள் மற்றும் நகை வியாபாரிகள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டதால், செட்டியார் தெரு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கர்ப்பமானதை வெளியில் சொன்னால் தோஷம் திரும்பி வந்து விடும் ; பரிகாரம் என்ற பேரில் சிறுமிக்கு அரங்கேறிய செயல்
இதேவேளை, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிலைமையைச் சீராக்கியதோடு, தாக்குதலில் ஈடுபட்ட பொலிஸார் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அவரது உறுதிமொழியைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்கள் கலைந்து சென்றதோடு, போக்குவரத்தும் சீர் செய்யப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடத்தப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.