கர்ப்பமானதை வெளியில் சொன்னால் தோஷம் திரும்பி வந்து விடும் ; பரிகாரம் என்ற பேரில் சிறுமிக்கு அரங்கேறிய செயல்
மராட்டியத்தில் தோஷம் கழிக்கிறேன் என கூறி பாலியல் பலாத்காரம் செய்ததில் சிறுமி கர்ப்பிணியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டியத்தின் லத்தூர் மாவட்டத்தில் தாக்ரே சவுக் பகுதியில் வசித்து வரும் ஒருவர் இவர் 17 வயது சிறுமியிடம், உனக்கு ஜாதகத்தில் தோஷம் இருக்கிறது. அதனை சில சடங்குகள் நடத்தி தீர்க்கிறேன் என கூறியுள்ளார்.

விசாரணை
அதனை சிறுமியும் நம்பி உள்ளார். இதன்பின்னர் தோஷம் கழிப்பதற்கான விசயங்களை செய்கிறேன் என கூறி சிறுமியின் வீட்டில் வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பிணியானாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை யாரிடமும் கூறக்கூடாது என்றும் அப்படி கூறினால், தோஷம் திரும்பி வந்து விடும் என்று கூறி சிறுமியை மிரட்டியிருக்கிறார். இதனால், சிறுமி யாரிடமும் இதுபற்றி கூறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,பொலிசில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, புதிய குற்றவியல் சட்டம், போக்சோ மற்றும் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான மாநில சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவாகி உள்ளது.
இந்த வழக்கு பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என விவேகானந்த சவுக் காவல் நிலைய அதிகாரி கூறிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.