நாட்டின் மேலும் சில பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை
மலையகத்தில் தொடரும் சிரற்ற வானிலை காரணமாக ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலையத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (25) விடுமுறையை வழங்க தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை நடவடிக்கை
அதேநேரம் மத்திய மாகாணத்திலுள்ள ஏனைய கல்வி வலயங்களில் பாடசாலைகளை நடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானத்தை அந்ததந்த வலயங்களின் அதிகாரிகள் தீர்மானிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஹட்டன் கல்வி வலயத்தில் நாளைய தினத்திற்கான பாடசாலை நடவடிக்கைகளுக்கு பதிலாக வேறொரு நாளில் பதில் பாடசாலை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு, மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினரின் பாதுகாப்பை முன்னிறுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.