இரகசிய தகவலால் சிக்கிய இளைஞன் ; விசாரணையில் வெளியான அதிர்ச்சி பின்னணி
பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேரஹெர பகுதியில் பெருமளவான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

போதைப்பொருள் கடத்தல்
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 01 கிலோகிராம் 80 கிராம் ஹெரோயின், 05 கிலோகிராம் 24 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வேரஹெர, பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.
வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் இணைந்து, இவர் இலங்கைக்குள் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை நடத்திச் சென்றுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.