அம்பலமான சட்டவிரோத செயல் ; இரகசிய தகவலால் பிடிபட்ட இளைஞன்
பாதுக்கை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உஸ்வெலி மாவத்தை பகுதியில் 75 லீற்றர் (100 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானத்துடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை (27) வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசேட சோதனையின்போதே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பாதுக்கை பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோத மதுபானம்
கைது செய்யப்பட்டவர் பாதுக்கை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 75 லீற்றர் (100 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் பாதுக்கை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.