மதுபோதையில் மனைவியை தாக்கிய கணவன்! கோபத்தில் தந்தையின் முக்கிய உறுப்பை வெட்டிய மகன்

Shankar
Report this article
கேகாலை பகுதியில் தந்தையின் ஆண் உறுப்பை வெட்டிக் காயப்படுத்தியதாக இளைய மகன் ரம்புக்கனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையொருவரே காயமடைந்துள்ளார்.
தாக்குதலுக்குள்ளனவர் நீண்ட நாட்களாகத் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவர் கடந்த 30 ஆம் திகதி இரவு மது போதையில் வீட்டிற்குச் சென்று மனைவியைப் கொடூரமாக தாக்கியுள்ளார்.
இதன்போது இவர் அணிந்திருந்த வேட்டி அவிழ்ந்து கீழே வீழ்ந்துள்ள நிலையில் சம்பவ இடத்திலிருந்த 28 வயது இளைய மகன் தந்தையின் ஆண் உறுப்பைக் கூரிய ஆயுதத்தால் வெட்டி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, காயமடைந்தவர் ரம்புக்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கேகாலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரான இளைய மகன் ரம்புக்கனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ரம்புக்கனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.