காதலனை காப்பாற்ற பொலிஸ் உத்தியோகத்தரை கடித்த யுவதி
இளைஞர்கள் இருவரை அம்பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிபோதையில் வந்த 25 மற்றும் 27 வயதுடைய இளைஞர்களே சனிக்கிழமை (20) இரவு பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ரோஷமாக நடந்து கொண்ட காதலி
இந்நிலையில் அவ் இளைஞர்களை மீட்பதற்காக இளைஞன் ஒருவரின் காதலியான யுவதி ஒருவர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று ஆக்ரோஷமாக நடந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவரையும் கைது செய்ய முற்பட்ட இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தரை கடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மூவரையும் சனிக்கிழமை (21) பலப்பிட்டிய நீதவான் முன்னிலையில் முன்னிறுத்திய போது எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.