இணைப்பாடவிதான செயற்பாட்டால் யாழ் இந்துகல்லூரி மாணவன் படைத்த சாதனை!
யாழ்ப்பாணம் இந்துக்காலூரி மாணவரான செல்வன் கருணாகரன் திவாசவன் பிறக்கிருத்திய செயற்பாடுகளில் சாதித்தனூடாக மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளார் .
இயன் மருத்துவ துறை (Physiotherapy ,University of Colombo பாடத்திற்கு தெரிவாகியிருந்த க.திவாசவன் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தேசிய மட்ட சாதனையாளர்கள் நேர்முகத்தேர்வின் பின்னர் ஊவா வெல்லச பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக வாய்ப்பை பெற்றுக்கொடுத்த இணைப்பாடவிதான செயற்பாடு
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் பிரதான மூன்று பாடங்களிலும் பெற்றுக் கொள்ளும் புள்ளிகளுக்கான Z புள்ளியின் அடிப்படையில்தான் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் தெரிவாகின்றனர்.
எனினும் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு ,இணைப்பாடவிதானத்தில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களை விசேட முறைமையின் கீழ் பல்கலைக்கழகத்திற்கு மேலதிக வாய்ப்பை வழங்கி வருகிறது.
2024 ம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 90 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்குத் தெரிவாகினர் மேலும் இருவர் விசேட வகையில் தெரிவு செய்யப்பட்டனர்.
இதனடிப்படையில் எமது பாடசாலையின் க.பொ.த உயர்தரஉயிரியல் பிரிவு மாணவனான க.திவாசவன் மருத்துவ பீடம் (ஊவா வெல்லச பல்கலைக் கழகம்) செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன் பிரகாரம் அவரால் ஈட்டப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கான சான்றுகள் வருமாறு,
உயர்தரப் பரீட்சை பெறுபேறு – A2B மாவட்ட நிலை – 113 Z – புள்ளி 1.7901
சிரேஷ்ட மாணவ முதல்வர் - 2022-2023 மாணவ முதல்வர் சபை நிர்வாக குழு
மாணவ முதல்வர் 2021- 2022
மேற்கத்தேச இசை வாத்தியக் குழு (தரம் 10 – உயர்தரம் வரை)
கீழைத்தேச இசை வாத்தியக் குழு ( தரம் 08 – உயர்தரம் வரை)
இயற்கைச் சூழல் மன்ற (Nature Club) தலைவர்(2021) மற்றும் உறுப்பினர் (2020)
பூப்பந்தாட்டக் கழகம் உறுப்பினர்
கவின் கலை மன்ற உறுப்பினர் தேசிய மட்டத்தில் முதலாம் இடம் - கர்நாடக சங்கீத குழுவாத்திய இசை - 2022
தேசிய மட்டத்தில் முதலாம் இடம் பல்லியம் -2023
தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் - குழு இசை – 2018
மாகாண மட்டம் புல்லாங்குழல் இரண்டாவது இடம்- 2022
வலய மட்டதமிழ் தின குழு இசை இரண்டாம் இடம் 2015
வலய மட்ட நாட்டார் பாடல்
Dictation- Zonal level 2022 நேர்முகத்தேர்வில் உயர்தரக் காலப்பகுதியில் பெற்ற அடைவுகள் பிரதானமாக கொள்ளப்பட்டாலும் பாடசாலைக் கால அடைவுகள் அனைத்தும் கருத்திற்கொண்டு நோக்கப்பட்டது.
பாடசாலையால் வழங்கப்பட்ட நற்சான்றுப் பத்திரம், மற்றும் மாணவர் முதல்வர் சபையால் மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் கருத்திற் கொள்ளப்பட்டது.
இத்தகைய ஆளுமைத்திறனை வெளிப்படுத்தி முன்னாள் சிரேஸ்ட மாணவ முதல்வன் கருணாகரன் திவாசவன் மருத்துவ பீடத்திற்குத் தெரிவாகியுள்ளார்