பொலிஸாரை ஏமாற்றி யுவதி அரங்கேற்றிய மோசமான செயல், விடுதி அறையில் சிக்கிய தம்பதி
கண்டி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் யுவதி ஒருவரை, கண்டி பொலிஸார் நேற்று (21) கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட யுவதி போலிப் பெயரில் முகநூல் கணக்கொன்றை நடத்தி வந்துள்ளார். அதில் போதைப்பொருள் பயன்பாட்டையும், வியாபாரத்தையும் மிகக் கடுமையாக விமர்சித்து பதிவுகளை இட்டு வந்துள்ளதுள்ளதுடன் சூட்சுமமாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுவந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்து 17 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும், கண்டி நகரில் உள்ள விடுதி ஒன்றினைச் சோதனையிட்ட போதே குறித்த யுவதியுடன் தொடர்புடைய மேலும் ஒரு தம்பதியினரும் 2 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், உடற்பிடிப்பு நிலையம் ஒன்றை நடத்தி வரும் இவர், ரத்மலானை பகுதியைச் சேர்ந்தவருடைய போதைப்பொருள் வலையமைப்பின் கண்டி முகவராகச் செயற்பட்டு வந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர், மேலதிக விசாரணைகளுக்காகத் தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.