யாழ்ப்பாணத்தில் 22 நாட்களாக யுவதி மாயம் ; மகளை மீட்டுத் தருமாறு தாய் கோரிக்கை
யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திலிருந்து காணாமல் போன தனது மகளைத் தேடிக் கண்டறிய பொலிஸார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த யுவதி காணாமல் போனமை தொடர்பில் அவரது தாயார் கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
எனினும், முறைப்பாடு செய்து 22 நாட்கள் கடந்துள்ள போதிலும், தனது மகள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை எனத் தாயார் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தனது மகள் காணாமல் போனதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மகளைக் கண்டறிவதற்கான விசாரணைகளை பொலிஸார் துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், காணாமல் போன தனது மகளை விரைவாகக் கண்டறிந்து தன்னிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொலிஸாரிடம் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனரா என்பது குறித்த மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.