யாழில் இடம்பெற்ற கோர விபத்து ; சம்பவ இடத்திலேயே உயிரிழந்த முதியவர்
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியின் இணுவில் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 67 வயதுடைய முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணை
குறித்த விபத்து இன்று (220 வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இணுவில் பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த முதியவர் துவிச்சக்கர வண்டியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் தகவல் அறிந்த சுன்னாகம் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.
பின்னர், உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.