கணவனை கைவிட்டு காதலனுடன் சென்ற மகள் ; இறுதியில் தந்தை கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்
மத்தியபிரதேச மாநிலம் பிண்டு மாவட்டம் ஹிரியா தபக் கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதனிடையே, திருமணம் ஆவதற்கு முன்பு இருந்தே உறவுக்கார இளைஞருடன் குறித்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணமான பின்னரும் குறித்த பெண் உறவுக்கார இளைஞருடனான உறவை தொடர்ந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு
மேலும், கடந்த சில நாட்களுக்குமுன் கணவரை கைவிட்டு தனது காதலனுடன் திருமணம் செய்துகொண்டு அப்பகுதியில் உள்ள கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கணவரை கைவிட்டு நித்து காதலுடன் சென்றதால் குறித்த பெண்ணின் தந்தை மிகுந்த ஆத்திரத்தில் இருந்துள்ளார். அதேவேளை, மகள் குடியிருந்த இடம் குறித்து அறிந்த தந்தை அங்கு சென்று தன்னுடன் கிராமத்திற்கு வருமாறு கூறியுள்ளார்.
தந்தையின் பேச்சை கேட்டு தந்தையுடன் ஹிரியா தபக் கிராமத்திற்கு வந்துள்ளார். அங்கு வைத்து தான் மறைத்து கொண்டுவந்த துப்பாக்கியால் தந்தை சரமாரியாக சுட்டுள்ளார்.
தந்தை துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே பெண் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து சென்ற பொலிஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற தந்தையை கைது செய்தனர்.