மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விடுதி; சோதனைக்கு சென்ற பொலிஸாருக்கு அதிர்ச்சி!
கடவத்தை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியின் மேலாளர் உட்பட ஐவர் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவதற்காக ஒரு நபரிடம் இருந்து 5,000 ரூபா கட்டணமாக அறவிட்டுள்ளதாகவும், இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 50,000 ரூபா வரை வருமானம் ஈட்டியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

போதை மாத்திரைகளை பயன்படுத்தி விபச்சாரம்
அத்துடன் பெண்கள் விபச்சார நடவடிக்கைகளுக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள போதை மாத்திரைகளை பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் களனி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் நுவன் அசங்கவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, கடவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் புத்திக ராஜபக்ஷ தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.