ஓடும் பேருந்தில் இளம் பெண்ணிடம் பாலியல் சேட்டை ; இறுதியில் முதியவருக்கு நடந்த சம்பவம்
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மூடபித்ரி பெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் ரகுமான் (வயது 60).
இவர் சம்பவ தினத்தன்று மூடபித்ரியில் உள்ள தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது குறித்த பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது.
பாலியல் தொல்லை
ரகுமானுக்கு முன்னால் 25 வயது இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது ரகுமான் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லைகளை கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அந்த இளம்பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதுகுறித்து பக்கத்தில் நின்றவர்கள் இளம்பெண்ணிடம் கேட்டுள்ளனர். எனினும் அதற்கு அந்த இளம்பெண் ஒன்றும் தெரிவிக்கவில்லை.
இளம்பெண்ணுக்கு ரகுமான் பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோ பஸ்சில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
இதன் அடிப்படையில் மூடபித்ரி பொலிஸார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து ரகுமானை கைது செய்துள்ளனர். இது குறித்து சந்தேகநபரிடம் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருகின்றன